×

இலங்கை கடற்பகுதியில் படகிலிருந்து ரூ.510 கோடி மதிப்புள்ள 102 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினர் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த மீன்பிடி படகை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். அப்போது படகிலிருந்து ரூ.510 கோடி மதிப்புள்ள 102 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக 6 பேரை மீன்பிடி படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமநாதபுரத்தில் நேற்று ரூ.100 கோடி போதைப்பொருள் சிக்கிய நிலையில் இலங்கை கடற்பகுதியிலும் போதைப்பொருள் கைப்பற்றியது.

Tags : Sri Lanka Navy ,Sri Lankan Marines ,
× RELATED சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொலை!