வெளிநாட்டவராக அறிவிக்கப்பட்ட வங்கதேச இந்து பெண்ணுக்கு சிஏஏயின் கீழ் குடியுரிமை: உள்துறை அமைச்சகம் வழங்கியது

கவுகாத்தி: வங்கதேசத்தை சேர்ந்தவராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. அசாமின் கச்சார் மாவட்டம் தோலாய் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஹவைதாங் பகுதியில் வசிப்பவர் டெபாலி தாஸ் (59). வங்கதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்தில் திப்பூர் கிராமத்தில் வசித்து வந்த இவர் கடந்த 1987ல் பராய் கிராமத்தை சேர்ந்த அபிமன்யு தாஸ் என்பதை மணந்தார். இந்த ஜோடி 1988ல் இந்தியாவுக்குள் நுழைந்து கச்சார் மாவட்டத்தில் வசித்து வந்தனர்.

கடந்த 2013ல் போலீசார் சோதனை நடத்திய போது டெபாலி வங்கதேசத்தை சேர்ந்தவர், சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்தது. கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து 2019ல் வெளிநாட்டின் தீர்ப்பாயம் டெபாலியை சட்டவிரோத குடியேறியாக அறிவித்தது. தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேர் அவர் கைது செய்யப்பட்டு, அசாமின் சில்சார் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

பின்னர் 2021ல் ஜாமீனில் வந்த டெபாலி, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தார். உரிய ஆய்வுக்குப் பின் அவருக்கு கடந்த 6ம் தேதி இந்திய குடியுரிமையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வழங்கியதாக டெபாலியின் வழக்கறிஞர் கூறி தெரிவித்தார். டெபாலிக்கு முன்பு அசாமில் 4 வங்கதேசத்தினருக்கு சிஏஏ சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: