சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரரிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தந்திரி உள்பட இதுவரை 8 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மார்ச் முதல் வாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி தந்திரி கண்டரர் ராஜீவரருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதன்படி அவர் நேற்று கொச்சியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 4 மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது.

Related Stories: