மாவட்டம் முழுவதும் குடியேறும் போராட்டம்

போச்சம்பள்ளி, பிப்.10: போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 400 பேரை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா, புதுச்சேரி மாநிலத்தில் வழங்கியதைபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு மாத பராமரிப்பு தொகை ₹3 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும், அதிக பாதிப்பிற்குள்ளாக  மாற்று திறனாளிகளுக்கு ₹5 ஆயிரம் உயர்த்தி வழங்கிட வேண்டும்.  தனியார் துறைகளில் 5 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். அண்ணாமலை, கோடீஸ்வரன், பிரபாகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் பெரியசாமி போராட்டம் குறித்து பேசினார்,  வெண்ணிலா, செந்தாமரை, செல்வி, பல்ராமன், ராஜா, செல்வராஜ், செந்தில் உள்ளிட்டோர்  கலந்து கொண்டு தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை போச்சம்பள்ளி இன்ஸ் பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் 39 பெண்கள் உள்ளிட்ட 85 பேரை கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் அஞ்செட்டி தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.ஒன்றிய தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.துணை தலைவர் முனுசாமி,செயலளார் பெருமாள், துணை செயலாளர் தியாகரசன், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேப்பனஹள்ளி:வேப்பனஹள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலகங்களில் குடியேறும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மாநில துனைத் தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார்.செல்வராஜ், சங்கரப்பா மற்றும் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலத்திற்குள் நுழைய முயன்றனர்.இதை போலீசார் தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வேப்பனஹள்ளி -கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர்.

Related Stories: