நன்றி குங்குமம் தோழி
எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும் எதிர்ப்பு சக்தியில் முதலிடம் வகிக்கிறது முருங்கை. நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.
*முருங்கை கீரை அல்லது இரண்டு முருங்கை காயை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால் நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.
*முருங்கையில் வைட்டமின் சி ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட 7 மடங்கு அதிகமாக உள்ளது.
*முருங்கையில் வைட்டமின் பி2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.
*முருங்கையில் பி3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.
*முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.
*முருங்கையில் மெக்னீசியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.
*முருங்கையில் இரும்புச் சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது.
*முருங்கையில் பொட்டாசியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.இவ்வளவு சத்துக்களையும் விட்டமின்களையும் உள்ளடக்கிய முருங்கை கீரையையும் காயையும் உண்டு என்றும் இளமையோடும் ஆரோக்கியத்துடனும் வாழலாம்.
தொகுப்பு: ச. லெட்சுமி, தென்காசி.
