×

தமிழ்நாடு மீனவர் நல வாரிய உதவி திட்டங்களை எளிய முறையில் பெற புதிய வசதி

சென்னை: கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இறப்பு நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்பிற்கான நிவாரணம், மீன்பிடிக்கையில் காணாமல் போன மீனவருக்கான நிவாரணம், உறுப்பினரின் மகன் மற்றும் மகள் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், பல அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியமின்றி, முழுமையாக இணையதளம் வாயிலாக அனைத்து நலத்திட்டங்களுக்கும் எளிமையாக விண்ணப்பிக்கலாம். ஆதார் அடிப்படையிலான இ-கேஒய்சி மூலம் தனிநபர் அடையாளம் சரிபார்க்கப்பட்டு குறைந்த ஆவணங்களுடன் அனைத்து நலத்திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் அவசியம் இருப்பின் விண்ணப்பதாரர் துணை ஆவணங்கள் சமர்ப்பிக்கலாம். அவை, தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Fishermen Welfare Board ,Chennai ,Animal Husbandry, Dairying, Fisheries and Fishermen Welfare Department ,
× RELATED கீழடி, ஆதிச்சனூர் உள்ளிட்ட 8 இடங்களில்...