சென்னை: சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, ‘‘தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழகத்திற்கு தொழில் தொடங்க வந்த எந்த நிறுவனமும் தங்கள் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு சென்றதில்லை. தொழில் துறையில் உலக நாடுகளுடன் தமிழ்நாடு போட்டி போடுகிறது” என்றார்.
