×

ஈரானில் இருக்கும் தமிழக மீனவர்கள் குறித்து தகவல் அளிக்க உத்தரவு

சென்னை: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா திடீர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதையடுத்து, ஈரான் பதிலுக்கு அமெரிக்காவின் ஏவுதளங்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்த தொடங்கியது. இதையடுத்து மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில், பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் தற்போது ஈரானில் இருப்பின், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி ஈரானில் இருக்கும் மீனவரின் பெயர், தந்தை பெயர், முகவரி, ஆதார் எண், குடும்ப அட்டை எண், தொலைபேசி எண், பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் ஈரானில் இருக்கும் இடம் குறித்த தகவல்களை அந்தந்த பகுதி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் தெரிவிக்குமாறு, மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Iran ,Chennai ,Israel ,United States ,Middle East ,
× RELATED கீழடி, ஆதிச்சனூர் உள்ளிட்ட 8 இடங்களில்...