கீழடி, ஆதிச்சனூர் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி தர வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கீழடி, ஆதிச்சனூர் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “2025 ஜூலையில் ஒப்புதல் கோரி முன்மொழிவுகள் சமர்பிக்கப்பட்ட நிலையில் இதுவரை அனுமதி தரவில்லை. 8 மாதங்கள் கடந்தும் அனுமதி அளிக்காமல் ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது. அகழாய்வு பணிக்கு ஒப்புதல் தர ஏன் தயக்கம்? ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலம் அகழாய்வுக்கு உகந்ததாக இருக்கும். ஜூலை மாதத்துக்கு பின் மழைக்காலம் தொடங்கி விடும் என்பதால் அகழாய்வு பணி தாமதமாகும். ஒன்றிய அரசு அனுமதி தர தாமதமாவதால் அகழாய்வு பணிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட நிதியும் வீணாகும்” எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: