உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கலெக்டர், தாலுகா அலுவலகங்கள் முன் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

மயிலாடுதுறை, பிப். 10: மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறையில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல் குத்தாலம் தாலுகா அலுவலகம் முன் 28 மாற்றுத்திறனாளிகள், தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் முன் 60 மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி:

சீர்காழி தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. சீர்காழி வட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகிததார். சீர்காழி நகர செயலாளர் சுரேஷ்குமார், வைத்தீஸ்வரன்கோயில் செயலாளர் முருகன் நடராஜன் முன்னிலை வகித்தார். மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: