×

பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளதால் மூணாறில் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைவு

மூணாறு : பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளதால் மூணாறில், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருந்தது.கோடை வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க பிரபல சுற்றுலா தலமான கேரள மாநிலம் மூணாறுக்கு, சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

தற்போது பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிக்க துவங்கி விட்டாலும், மூணாறில் விடுமுறை நாளான நேற்று குறைவான பயணிகளே வந்திருந்தனர். கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கவுள்ளது.

அதேபோன்று தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் இந்த மாதம் துவங்க உள்ளதால் மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நேற்று குறைந்தே காணப்பட்டது. இதனால் மூணாறின் முக்கிய சுற்றுலா மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

குறிப்பாக மாட்டுபட்டி மற்றும் குண்டளை அணையில் சீசன் நேரத்தில் தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள், படகு சவாரி செல்லும் நிலையில் தற்போது ஆயிரத்துக்கும் குறைவான பயணிகளே படகு சவாரி சென்றனர்.

Tags : Munnar ,Kerala ,
× RELATED தமிழகம் அனைத்து துறைகளிலும் ஆல்...