- போசம்பள்ளி
- போச்சம்பள்ளி
- போச்சம்பள்ளி வரச்சந்தா
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- மாத்தூர்
- வேலம்பட்டி
- Chandur
- அரசம்பட்டி
- சாமல்பட்டி
- ஓலபதி
- கல்லாவி
- புலியூர்
- Barur
*விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி வாரச்சந்தையில் 25 டன் புளி விற்பனையானது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, மத்தூர், வேலம்பட்டி, சந்தூர், அரசம்பட்டி, சாமல்பட்டி, ஒலப்பட்டி, கல்லாவி, புலியூர், பாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1 லட்சத்திற்கு மேல் புளியமரங்கள் உள்ளன. குறிப்பாக அஞ்செட்டி, உரியம் ஆகிய மலை பகுதிகள் மற்றும் போச்சம்பள்ளி உள்ள மண் வளம் சாகுபடிக்கு ஏதுவாக உள்ளது.
இப்பகுதியில் விளையும் புளி அதிக சதைப்பற்றுடன் சுவையாக இருப்பதால், சந்தைகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநில வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து வாங்கி செல்கின்றனர். மேலும், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு டன் கணக்கில் புளி விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டு தோறும் ஏபரல், மே மாதங்களில் இருந்து புளியம் பழங்களை உலுக்கி எடுத்து, அதனை கொட்டை, ஓடுகள், நார் நீக்கி சுத்தம் செய்து விற்பனை செய்கின்றனர். நடப்பாண்டு பருவமழை பரவலாக பெய்ததால், புளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
விவசாயிகள், வியாபாரிகள் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு மூட்டை கணக்கில் புளியை எடுத்து வந்து விற்பனை செய்தனர். புளியை வாங்குவதற்கு திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கல்லாவி, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வியாபாரிகள் குவித்தனர்.
இதனால் புளி சந்தை களைகட்டியது. கடந்த வாரத்தை காட்டிலும், இந்த வாரம் புளி வரத்து அதிகரித்து, விலையும் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டதால், புளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் கடந்த வாரம் புளி கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிலோ புளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி, மூட்டை கட்டி டெம்போ மூலம் எடுத்து சென்றனர்,’ என்றார்.
