துரோகத்துக்கு பாடம் புகட்ட திமுகவில் ஓபிஎஸ் பா.பிளாக் பாராட்டு

சென்னை: அகில இந்திய பார்வர்ட் பிளாக் தினகரன் பிரிவு மாநில பொதுச்செயலாளர் எஸ்.தினகரன் அறிக்கையில், ‘‘முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து திமுகவில் சேர்ந்தது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. போலி சர்வாதிகாரி எடப்பாடி பழனிசாமியால் பலமுறை பல விதத்தில் அவமானங்களை சகித்தவர். மறைந்த தலைவர் மூக்கையா தேவர் உருவ வெண்கலச் சிலைக்கு நிதி ஒதுக்க மறுத்தவர் எடப்பாடி. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தன் சொந்த பணத்தில் உசிலம்பட்டியில் வெண்கல சிலை நிறுவினார். துரோகத்திற்கு பாடம் புகட்ட இதை தவிர ஓ.பன்னீர்செல்வத்திற்கு வேறு வழி இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: