ஜெய்பூர்: பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அங்கு, ராஜஸ்தானின் வளர்ச்சிப்பாதையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அஜ்மீரில் ரூ.17,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், அஜ்மீரில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான பிரசாரம் தொடங்கப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, நோய் தடுப்பு சிகிச்சையை வலுப்படுத்துவது, நல்வாழ்வை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக, நாடு தழுவிய அளவில், 14 வயது நிரம்பிய பெண்களுக்கு மனித பப்பிலோமா வைரஸ்(எச்பிவி) என்ற கருப்பை வாய் புற்றுநோய்க்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
