புதுடெல்லி: வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்கள் தலைமையிலான போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால், வங்கதேச நாட்டினருக்கான விசாக்களில் இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தது. 2024ம் ஆண்டு 17,50,165ஆக இருந்த வங்கதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2025ல் 4,66,012ஆக குறைந்தது. கடந்த ஆண்டில் அமெரிக்காவில் இருந்து 11.8லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர். இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து 10.7லட்சம் சுற்றுலா பயணிகள், ஆஸ்திரேலியாவில் இருந்து 5.4 லட்சம் மற்றும் கனடாவில் இருந்து 5.3லட்சம் சுற்றுலா பயணிகளும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். மொத்தத்தில் இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டு 9.4சதவீதம் குறைந்துள்ளது.
