- இந்திய வெளியுறவு அமைச்சகம்
- மத்திய கிழக்கு
- தில்லி
- இந்தியா
- ஈரான்
- வளைகுடா
- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு
டெல்லி: ஈரான், வளைகுடா நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை அதிகரிக்கும் செயல்களைத் தவிர்த்து, மக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “ஈரானிலும் வளைகுடா பிராந்தியத்திலும் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும், பதற்றத்தைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம். பதற்றத்தைத் தணிக்கவும், அடிப்படைக் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளைப் பின்பற்ற வேண்டும். அனைத்து நாடுகளின் இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும்.
அந்தப் பிராந்தியத்தில் உள்ள எமது தூதரகங்கள் அங்குள்ள இந்தியக் குடிமக்களுடன் தொடர்பில் உள்ளன. அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், தூதரகங்களுடன் தொடர்பில் இருக்கவும், உள்ளூர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளது.
