×

காங்கயம் நீதிமன்றத்தில் சமரச நாள் விழிப்புணர்வு முகாம்

காங்கயம், ஏப்.10: காங்கயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காங்கயம் துணை சமரச மையம் சார்பில் சரமச நாள் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தாணகிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வி தேன்மொழி முன்னிலையில் சமரச நீதிமன்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், நீதிமன்றத்தில் சமரச மையம் செயல்படுகிறது, இதில் நேரடியாக நீங்களே எதிர் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், வழக்கறிஞர்கள் உங்களுக்கு உதவலாம்.

பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ரகசியம் காக்கப்படும். உங்கள் வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்காது, மேல்முறையீடு இல்லாமலும், இறுதியான சுமுகத்தீர்வு, கட்டணம் ஏதுமின்றி காண முடியும் என்பது உள்ளிட்ட விழிப்புண்ர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் கந்தசரவணகுமார், வழக்கறிஞர்கள் குப்புசாமி, ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : CONCILIATION DAY AWAKENING CAMP ,KANGAYAM COURT ,Kangayam ,Aramasa Day Awareness Camp ,Kangayam Sub-Reconciliation Centre ,Gangayam ,Integrated Court Complex ,Judge ,Sandanakrishnasamy ,Court of Conciliation ,Thenmozhi ,
× RELATED காங்கயத்தில் தேர்தல் செலவின மேற்பார்வையாளர் கள ஆய்வு