திருப்பூர், ஏப். 12: திருப்பூர் குமார் நகர் பகுதியில் அமைந்துள்ள ரேவதி மெடிக்கல் சென்டர் வளாகத்தில், இன்று (12ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச இருதய மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இருதய நிபுணர்கள் டாக்டர் கே.இ. சிவ விக்னேஷ், டாக்டர் ஜெ. அசோக் குமார்ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து, தேவையான ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
ரூ.1700 மதிப்புள்ள பரிசோதனைகள் ரூ.200க்கு வழங்கப்படுகின்றன. சர்க்கரை அளவு பரிசோதனை, இசிஜி, கிரியேட்டினின் பரிசோதனை, எக்கோ ஸ்கிரீனிங், உணவியல் நிபுணர் ஆலோசனைகளும் அடங்கும். ஆஞ்சியோகிராம் பரிசோதனை ரூ.9999 கட்டணத்தில் வழங்கப்படுகிறது. ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கும் சலுகை வழங்கப்படுகிறது என்று ரேவதி மெடிக்கல் சென்டரின் தலைவர் டாக்டர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.
