- ஜான் பாண்டியன்
- தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகம்
- சென்னை விமான நிலையம்
- ஓ. பன்னீர்செல்வம்
- திமுக
- எடப்பாடி பழனிசாமி
சென்னை விமான நிலையத்தில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் அளித்த பேட்டி: ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளார் என்பது, சட்டமன்றத்தில் அவர் நடந்து கொண்ட செயல்பாடுகளில் தெரிந்துவிட்டது. அதை எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியுள்ளார். அதை ஓபிஎஸ் இப்போது உறுதி செய்து விட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, ஓபிஎஸ்சை யாரும் சந்தித்து, கூட்டணிக்கு அழைக்கவில்லை. தற்போது ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது, அவர் எடுத்த முடிவு. அவர் எங்கிருந்தாலும், நன்றாக இருக்கட்டும். ஓபிஎஸ் திமுகவுக்கு சென்றதால், தென் மாவட்டங்களில் எங்கள் கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. இதனால் எங்கள் கூட்டணிக்கு, எந்த நஷ்டமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
