×

குடிமகனிடம் கெஞ்சிய மாஜி

மதுரையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் முனிச்சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘மகளிருக்கு எடப்பாடி பழனிசாமி ரூ.2 ஆயிரம் தருவதாக சொல்லி இருக்கிறார். உங்களுக்கு பணம் போடலைன்னா எங்களை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

வாடகை வீட்டில் இருப்போருக்கு அடுக்கு மாடி வீடு கட்டித்தருவதாக எடப்பாடி சொல்லி இருக்கிறார். இதுக்கு ஜோரா கைதட்டுங்க… கை தட்ட மாட்றீங்களே…! எடப்பாடி பழனிசாமி ஆண்டுக்கு 3 சிலிண்டர் ப்ரீயா கொடுக்கப் போராரு’’ என்று பேசிய செல்லூர் ராஜூ தொடர்ந்து, ‘இப்போ ஒரு சிலிண்டர் என்ன விலை?’ என்று பொதுமக்களை பார்த்து கேட்க, அவர்கள் ‘950 ரூபாய்’ என்றனர்.

அதை காதில் வாங்காமல், ‘என்ன 3 ஆயிரம் ரூபாயா?’ எனக்கூறி பொதுமக்களையே திணறடித்தார். செல்லூர் ராஜூ பேசப்பேச அவர் பேசிய வார்த்தையையே சத்தமாக ஒரு குடிமகன் திரும்பத் திரும்ப ‘ரிப்பீட்’ செய்ததில், கடுப்பான செல்லூர் ராஜூ, ‘தலைவரே… கொஞ்ச நேரம் அமைதியா இருப்பா… அவருக்கு சேரை போடுங்கப்பா… உட்காரச் சொல்லுங்கப்பா…’ என்றார்.

Tags : AIADMK ,Munichalai Junction ,Jayalalithaa ,Madurai ,minister ,Sellur Raju ,Edappadi Palaniswami ,
× RELATED நிர்வாகிகளுக்கு திடீரென கட்டுப்பாடு...