- யூனியன்
- அமைச்சர்
- துணை ஜனாதிபதி
- ராதாகிருஷ்ணன்
- இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி
- சேலம்
- மத்திய ஜவுளித்துறை அமைச்சர்
- கிரிராஜ் சிங்
- மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று, ரூ.30 கோடியில் கட்டப்பட்ட புதிய கல்வி வளாகத்தை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசுகையில், ‘‘பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு எதையாவது செய்துள்ளாரா?, பதில் கூறுங்கள்? எனக் கேட்டார்.
அதற்கு கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இதை பார்த்ததும், கூட்டத்தில் பங்கேற்ற பாஜவினர் மட்டும் நிறைய செய்துள்ளார் என கையை உயர்த்திக் கூறினர். அதேபோல், விழா துவங்குவதற்கு முன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண், இங்கு நான் இங்கிலீசில் பேசவா? இந்தியில் பேசவா? தமிழில் பேசவா? என ஒவ்வொன்றாக கேட்டார்.
அப்போது, தமிழில் பேசவா என்றதும் மாணவர்கள், நெசவாளர்கள் கூச்சலிட்டு சரி என்றதுடன், இது தமிழ்நாடு என்றனர். இதை கேட்டதும் அங்கிருந்த ஒரு அதிகாரி வந்து, அந்த பெண்ணிடம் இனி நீங்கள் தமிழில் பேசக்கூடாது எனக்கூறிவிட்டார். அதன்பின் அப்பெண் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினார்.
