×

நிர்வாகிகளுக்கு திடீரென கட்டுப்பாடு விதித்த தவெக: ஒருவேளை அப்படி இருக்குமோ?? சமூக வலைதளங்களில் கேள்வி

தலைமைக் கழக அனுமதியின்றி, மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது. பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

எந்தவித தயாரிப்பும் இல்லாமல், அடிப்படை தகவல்கள் கூடத் தெரியாமல் நேரடி விவாதங்களில் பங்கேற்பதால் தவெகவினரை நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வந்தனர். அதனால்தான், நிர்வாகிகள் ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்க முன் அனுமதி கட்டாயம் என நடிகர் விஜய் அறிவித்துள்ளார் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்று வெளியான விஜய்யிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டுள்ளார் என்ற செய்தி பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

தவெக நிர்வாகிகள் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் கொடுக்கச்செல்லும்போது கண்டிப்பாக இந்த விவாகரத்து வழக்கு தொடர்பாக கேள்வி எதிர்கொள்வார்கள். அப்படி எதிர்கொண்டால் அவர்களின் சிறுபிள்ளைத் தனமான பதில்கள், மேலும் தனக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தான் வழக்குத் தொடர்ந்தது தெரிந்தவுடன், நேற்று முன்தினம் திடீரென நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்கள் போல தெரிகிறது எனவும்;

கட்சி தொடங்கியது முதலே தவெகவினர் நிர்வாகிகள் கொடுக்கும் நேர்காணல்கள் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகிவந்த போதிலும் இப்போது கட்டுப்பாடு விதிப்பதற்கு விவாகரத்து வழக்கும் காரணமாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டு ஒருவேள அப்படி இருக்குமோ?? என்ற கேள்வியை எழுப்பிச் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Tags : YouTube ,
× RELATED கோவையில் மூளைச்சாவு அடைந்த...