×

தவெகவுக்கு சென்ற ஒருவர் மீண்டும் வருவார்; வேலுமணி சொன்னது 100க்கு 100 உண்மை: நடிகை கவுதமி பேட்டி

சென்னை விமான நிலையத்தில் அதிமுகவைச் சேர்ந்த நடிகை கவுதமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுகவில் உள்ள தலைவர்கள் யாரும் செல்லவில்லை. அனைத்து மூத்த தலைவர்கள், பெரும் தலைவர்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். அதிமுக பலமாகத்தான் இருக்கிறது. ஓரிருவர் செல்வதால், கட்சி சிதறும் எனக் கூறுவதற்கு வாய்ப்பில்லை.

அதிமுக தமிழக மண்ணில் ஆழமாக பதிந்துள்ள கட்சி. திசை திருப்பும் முயற்சி பலிக்காது. அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற ஒருவர், மீண்டும் அதிமுகவிற்கு திரும்பி வர உள்ளார் என்று, வேலுமணி கூறியது நூறு சதவீதம் உண்மை. ஆனால் செங்கோட்டையன், தனக்கு ஏற்படும் அவமதிப்புகளை வெளியே சொன்னால் முகம் காட்ட முடியாத நிலை ஏற்படும் என்பதால் சமாளித்துக் கொண்டு இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Thaveka ,Velumani ,Gauthami ,AIADMK ,Chennai airport ,
× RELATED நிர்வாகிகளுக்கு திடீரென கட்டுப்பாடு...