×

குரூப் 2 மெயின் தேர்வு தேர்வுக்கட்டணம் செலுத்த கால அவகாசம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்குவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. குசென்னையில் தேர்வர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் தொடக்கத்தில் சென்னையில் மட்டும் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது அதன் பின்னர், தமிழகம் முழுவதும் இந்த தேரவுகள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதனைத்தொடர்ந்து நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான முதன்மைத் தேர்வின் இரண்டு தாள்களான தொகுதி 2 மற்றும் 2ஏ க்கான தமிழ் தகுதித்தேர்வு மார்ச் 15ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதன்மை தேர்வு கட்டணம் செலுத்தாத சில தேர்வர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கும் வகையில் மார்ச் 5ம் தேதி இரவு 11.59 மணி வரை வழங்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து தனிப்பட்ட வகையில் குறிஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஓடிஆர் மூலமாக தேர்வு கட்டணம் விரைவில் செலுத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : TNPSC ,Chennai ,TNPSC Group 2 ,Chennai… ,
× RELATED விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகையை...