×

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோவை மாணவி பலாத்கார வழக்கில் மார்ச் 7ம் தேதி தீர்ப்பு

கோவை: கோவை விமான நிலையம் அருகே காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த கருப்பசாமி (30), அவரது சகோதரர் காளீஸ்வரன் (21), மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர் தவசி (20) ஆகிய 3 பேரை போலீசார் காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கு, தற்போது கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கில் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த ஆண்டு டிச.2 ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை 2 கட்டமாக 250 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 6ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை நடந்தது. இதுவரை 72 பேரிடம் சாட்சி விசாரணை நடந்துள்ளது. கடந்த 23ம் தேதி சாட்சி விசாரணை முடிந்தது.

கடந்த 24ம் தேதி இந்த வழக்கில் கைதான 3 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் பூட்டிய அறையில் 1 1/2 மணி நேரம் விசாரணை நடந்தது. தொடர்ந்து அரசு தரப்பு வக்கீல் வாதம் 3 மணி நேரம் நடந்தது. மேலும் இந்த விசாரணையை 27ம் தேதிக்கு (நேற்று) ஒத்தி வைத்திருந்தார். அதன்படி, நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர் தரப்பு வக்கீல் வாதம் நடந்தது. பல கட்ட விசாரணை, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் மார்ச் 7ம் தேதி (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சுந்தர்ராஜன் அறிவித்தார்.

Tags : Coimbatore ,Tamil Nadu ,Karuppasamy ,Singampunari, Sivaganga district ,
× RELATED விவசாயிகளுக்கு கரும்பு கிரயத் தொகையை...