×

தெலங்கானாவில் ஜாக்பாட் மூத்த துப்புரவு பணியாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.2 லட்சம்: பொறியாளர்களுக்கு ரூ.7 லட்சம்

ஐதராபாத்,பிப்.27: தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பள உயர்வு அதிகரித்துள்ளது. இப்போது ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.6,000 கோடியை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடுகிறது. மின்சார வாரியத்தில் உள்ள உயர் அரசு பொறியாளர்கள் மாதத்திற்கு ரூ.7 லட்சம் வரை பெறுகிறார்கள். அதே நேரத்தில் கிரேட்டர் ஐதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனில் மூத்த துப்புரவுத் தொழிலாளர்கள் மாதத்திற்கு ரூ.2 லட்சம் சம்பளம் பெறுகிறார்கள்.

ஐதராபாத்தில் நிரந்தர துப்புரவுத் தொழிலாளர்கள் மாதத்திற்கு சராசரியாக ரூ.70,000 சம்பளமும், தொடக்க நிலை நகராட்சி ஊழியர்கள் ரூ.28,000 சம்பளமும் பெறுகிறார்கள். 2023-24 ஆம் ஆண்டில், மாநிலத்தின் வருவாயில் சுமார் 45% சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடனுக்கான வட்டி செலுத்துவதற்காகச் சென்றதாக சமீபத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை காட்டுகிறது. 2025-26 ஆம் ஆண்டுக்கான தெலங்கானா பட்ஜெட்டின்படி, மாநிலத்தின் வருவாய் ரசீதுகள் ரூ.2.30 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, வருவாய் செலவு ரூ.2.27 லட்சம் கோடி மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் தோராயமாக ரூ.3.05 லட்சம் கோடி ஆகும்.

Tags : Telangana ,Hyderabad ,Electricity Board ,
× RELATED நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம்...