×

மேக்சிஸ் நிறுவன விவகாரத்தில் ப.சிதம்பரம் மீது வழக்கு பதிய அனுமதி கேட்டு ஈடி மனு

புதுடெல்லி: கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விதிமுறைகளை மீறி சுமார் ரூ.3ஆயிரத்து 500கோடி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதில் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் முறைகேடாக பணம் பெற்றதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இதையடுத்து இது தொடர்பாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி ஒரு ரோஸ் அவன்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவன முறைகேடு தொடர்பான விவகாரத்தில், முன்னதாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ப. சிதம்பரத்தின் மீது வழக்கு பதிவு செய்ய தகுதி வாய்ந்த அதிகாரிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் விசாரணை நடவடிக்கையை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : ED ,P. Chidambaram ,Maxis ,New Delhi ,Union Finance Minister ,Malaysia ,Karti Chidambaram ,
× RELATED நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம்...