×

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தொழிலதிபர் அனில் அம்பானி நேற்று நேரில் ஆஜரானார். தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் ரூ.40ஆயிரம் கோடிக்கும் மேல் வங்கியில் கடன்பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவரான அனில் அம்பானியிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் இரண்டாவது முறையாக அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதன்பேரில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேற்று காலை சுமார் 10.30மணிக்கு அனில் அம்பானி வந்தார். 9 மணிநேரம் அவரிடம் விசாரணை நடந்தது.

* அனில் அம்பானி மீது மேலும் ஒரு வழக்கு
2,220 கோடி ரூபாய் வங்கி மோசடி தொடர்பாக அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. 2013-17 ஆம் ஆண்டில் பாங்க் ஆஃப் பரோடாவை ஏமாற்றியதாகவும், இதனால் வங்கிக்கு ரூ.2,220 கோடிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Anil Ambani ,New Delhi ,Enforcement Directorate ,Reliance Communications ,
× RELATED நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம்...