×

கர்நாடகாவில் பரபரப்பு சிறுமியிடம் பாலியல் சீண்டல் சாமியார் மீது போக்சோ: வீடியோ வைரல்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டம் ஷஹாபூரில் உள்ள மஹால் ரோஜா மடத்தின் சாமியார் மல்லிகார்ஜுன முத்யா(26). யூடியூப் மூலம் இவர் பிரபலமானதால், இவரைத் தேடி பலர் அந்த மடத்திற்கு வருகின்றனர். அந்தவகையில், மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பம் மல்லிகார்ஜுன முத்யாவை பார்த்திருக்கின்றனர்.

அவர்களது 7 வயது மகளை, போலி சாமியார் மல்லிகார்ஜுன முத்யா தனது மடியில் அமரவைத்து, சிறுமியை பாலியல் ரீதியாக தவறாக தொடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து சாமியார் மல்லிகார்ஜுன முத்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Karnataka ,Bengaluru ,Mallikarjuna Muthiya ,Mahal Roja Mutt ,Shahapur, Yadagiri district, Karnataka ,YouTube ,Solapur, Maharashtra… ,
× RELATED நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம்...