- ஐரோப்பிய ஒன்றிய
- அமைச்சர்
- புது தில்லி
- அஸ்வினி வைஷ்ணவ்
- டிஜிட்டல் செய்திகளின் சங்கம்
- வெளியீட்டாளர்கள்
- தில்லி
- மத்திய அமைச்சர் தகவல் தொழில்நுட்ப
- அஸ்வினி வைஷ்ணவ்
புதுடெல்லி: ஆன்லைன் உள்ளடக்கத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் சங்கத்தின் மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: டிஜிட்டல் தளங்கள் தாங்கள் வழங்கும் உள்ளடக்கத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். தவறான தகவல்கள் கூட, மணி நேரத்திற்குள் மில்லியன் கணக்கானவர்களுக்கு பரவக்கூடும்.
ஊடக அமைப்புகளைப் போலவே, தளங்களும் பொறுப்பேற்க வேண்டும். உள்ளடக்கத்திற்கு தளங்கள் பொறுப்பல்ல என்று சொல்லக்கூடிய காலம் போய்விட்டது. அந்தக் காலம் போய்விட்டது. எனவே தகவல்களைச் சரிபார்ப்பது, அதன் உள்ளடக்கத்திற்குப் பொறுப்பேற்பது ஆகியவற்றில் தங்கியுள்ளது. குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பு, அனைத்து குடிமக்களின் ஆன்லைன் பாதுகாப்பும் தளங்களின் பொறுப்பாகும். இந்தக் கொள்கைகளைப் பின்பற்றாத தளங்களை பொறுப்புக்கூற வைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
* வருவாய் பகிர்வு அவசியம்
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,’ டிஜிட்டல் தளங்கள் தாங்கள் வழங்கும் உள்ளடக்கத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். உள்ளடக்க படைப்பாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுடன் நியாயமான வருவாய் பகிர்வை உறுதி செய்ய வேண்டும் . படைப்பாளர்களுக்கு உரிய இழப்பீடு மறுக்கப்பட்டால் புதுமை பாதிக்கப்படும்.
டிஜிட்டல் தளங்கள், செய்தி நிறுவனங்களுடன் மட்டுமல்லாமல், தொலைதூரப் பகுதிகளில் உள்ள சுயாதீன படைப்பாளர்கள், செல்வாக்கு செலுத்துபவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடனும் நியாயமான வருவாய் பகிர்வை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பல நாடுகளில் உள்ளது போல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
* முகம், குரலை பயன்படுத்த ஒப்புதல் தேவை
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,’ ஏஐ.யால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியமாகும். முகம், குரல் அல்லது ஆளுமை பயன்படுத்தப்படும் நபரின் ஒப்புதல் இல்லாமல் அத்தகைய உள்ளடக்கத்தை உருவாக்கக்கூடாது. அறிவுசார் சொத்துரிமை மதிக்கப்பட வேண்டும். நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் ’ என்றார்.
