புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது. இன்ஸ்டாகிராம் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களை கடந்த முதல் அரசியல்வாதி என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். பிரதமர் மோடி, 2014ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன்(4.32 கோடி) பின்தொடர்பவர்களுடன் 2வது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 15 மில்லியன், பிரேசில் அதிபர் லூலாடா சில்வா 14.4 மில்லியன், துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் 11.6 மில்லியன் மற்றும் அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய் 6.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
