×

ஆந்திரா குற்றவாளி எமிரேட்டில் இருந்து இந்தியாவுக்கு கடத்தல்

புதுடெல்லி: ஆந்திராவை சேர்ந்தவர் அனில் குமார் ரெட்டி யெடுல்லா மீது பல்வேறு மோசடி மற்றும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெளிநாட்டில் தலைமறைவான அனில் குமார் ரெட்டியை ஆந்திர போலீசார் பல ஆண்டுகளாக தேடி வந்தனர். ஆந்திர பிரதேச போலீசாரின் கோரிக்கையை ஏற்று அனில் குமார் ரெட்டியை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கடந்த 2022ம் ஆண்டு சிபிஐ இன்டர் போலுக்கு சிபிஐ கடிதம் எழுதியது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக அனில் குமார் ரெட்டியை இன்டர்போல் மூலம் சிபிஐ தேடி வந்தது. அனில் குமார் ரெட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்த அனில் குமார் ரெட்டியை துபாய் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று ஐதராபாத்துக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அனில் குமார் ரெட்டியை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

Tags : Emirates ,India ,New Delhi ,Andhra Pradesh ,Anil Kumar Reddy Yedulla ,Anil Kumar Reddy ,Andhra ,Pradesh ,
× RELATED நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம்...