×

விமான டிக்கெட் முன்பதிவு 48 மணி நேரத்தில் ரத்து செய்தால் பிடித்தம் இல்லை: டிஜிசிஏ விதிமுறைகளில் மாற்றம்

புதுடெல்லி: விமான போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கை: விமான டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்த பிறகு பயணிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் லுக் இன் ஆப்ஷன் வழங்க வேண்டும். இந்த காலகட்டத்தில் ஒரு பயணி டிக்கெட்டை ரத்து செய்யலாம் அல்லது திருத்தலாம். அப்போது எந்த பணமும் பிடித்தம் செய்யக்கூடாது. கூடுதல் கட்டணங்களும் செலுத்தப்பட தேவையில்லை.

உள்நாட்டு விமானத்திற்கு 7 நாட்களுக்கும், சர்வதேச விமானங்களுக்கு 15 நாட்களுக்கும் குறைவாக இந்த வசதி கிடைக்காது. விமான நிறுவனத்தின் வலைதளம் மூலமாக நேரடியாக டிக்கெட் முன்பதிவு செய்யப்படும்போது விமான டிக்கெட் முன்பதிவு செய்த 24மணி நேரத்திற்குள் பயணியால் பிழை சுட்டிக்காட்டப்படும்போது அதே நபரின் பெயரில் திருத்தத்திற்காக விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது.

பயண முகவர் அல்லது போர்ட்டல் மூலமாக டிக்கெட் வாங்கினால் பணத்தை திரும்ப செலுத்தும் பொறுப்பு விமான நிறுவனமிடமே இருக்கும். அவை 14 நாட்களுக்குள் பணத்தை திரும்ப பெறும் செயல்முறை முடிவடைவதை உறுதி செய்யும்”என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : DGCA ,New Delhi ,
× RELATED நீதித்துறை ஊழல் இடம்பெற்ற விவகாரம்...