வெயிலின் தாக்கம் காரணமாக முதற்கட்டத்திலேயே தேர்தல் நடத்த வலியுறுத்தி உள்ளோம்: பெ.சண்முகம்

சென்னை: வெயிலின் தாக்கம் காரணமாக முதற்கட்டத்திலேயே தேர்தல் நடத்த வலியுறுத்தி உள்ளோம் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். வேட்பு மனுவுக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு இயந்திரத்திற்கு அடுத்து கண்ட்ரோல் யூனிட், அதற்கடுத்து விவிபேட் வைக்க வலியுறுத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் திருவிழாக்கள், பண்டிகைகளை கணக்கில் கொண்டு தேர்தல் அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: