சென்னை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தாம்பரம், விருத்தாசலம் வட்டாட்சியர்களுக்கு தலா ரூ.2.000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் தாலுகா வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கும் தலா ரூ.2,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலஞ்சேரி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்றும் உத்தரவை அமல்படுத்தவில்லை என அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், அபராத தொகையை 4 வாரங்களில் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.
