குட்கா விற்றவர் கைது

திருச்சி,பிப்.18: திருச்சியில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார். திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் குட்கா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பிப்.16ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே குட்கா விற்ற இனாம்குளத்தூர் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த பெரோஸ்கான் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 40 கிராம் குட்கா பறிமுதல் செய்து, ஜாமினில் பெரோஸ்கானை விடுவித்தனர்.

 

Related Stories: