கண்டதேவி கோயிலில் கும்பாபிஷேக குழு அமைக்க வழக்கு கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

மதுரை, பிப்.9: கண்டதேவி கோயிலில் கும்பாபிஷேக குழு அமைக்கக் கோரிய வழக்கில் கலெக்டர் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கண்டதேவியைச் சேர்ந்த செந்தில்நாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘‘எங்கள் ஊரில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. கோயில் மரியாதை தொடர்பான வழக்கில் யாருக்கும் மரியாதை இல்லையென இணை ஆணையர் நீதிமன்றத்தில் உத்தரவானது. இதை எதிர்த்த அப்பீல் மனு ஆணையரிடம் நிலுவையில் உள்ளது. தேவகோட்டை ஆர்டிஓ உத்தரவுப்படி கடந்த 4 ஆண்டுகளாக புரட்டாசி 10 நாள் திருவிழா யாருக்கும் மரியாதை இன்றி நடக்கிறது.அம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெற்றது. வருவாய் துறையினரால் நியமிக்கப்பட்டவர்களால் திருவிழாக்கள் நடத்தப்பட்டு முறையாக கணக்குகள் பார்க்கப்பட்டு, ஊர் பொதுவில் ஒப்படைக்கப்படுகிறது. தற்போது கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவாகியுள்ளது. இதற்காக கும்பாபிஷேகம் நடத்த குழுவை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் மனுவிற்கு சிவகங்கை கலெக்டர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 8க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: