எம்.ஜி.ஆர்.நகரில் சாலையில் நடந்த சென்ற போது வெறி நாய் கடித்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் படுகாயம்

சென்னை: எம்.ஜி.ஆர்.நகரில் சாலையில் நடந்து சென்ற போது வெறி நாய் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை துரத்தி கடித்து குதறியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை எம்.ஜி.ஆர்.நகர் சூளை பள்ளம் பகுதியை ேசர்ந்த 5ம் வகுப்பு மாணவன் ஹரிஹரன்(11), 9ம் வகுப்பு மாணவன் புவனேஷ்(14) ஆகியோர் டியூஷன் முடிந்து இருவரும் வீட்டிற்கு செல்ல சஞ்சய் காந்தி காலனி வழியாக நேற்று இரவு நடந்து ெசன்றனர். அப்போது அங்கு சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று, திடீரென வெறிப்பிடித்து சாலையில் நடந்து சென்ற 2 சிறுவர்களை துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த 2 சிறுவர்கள் வெறி நாயிடம் இருந்து தப்பித்து ஓடினர்.

ஆனால் அந்த வெறி நாய் 2 மாணவர்களையும் கடித்து குதறியது. அதோடு இல்லாமல் மாணவர்கள் பின்னால் நடந்து வந்த அதே பகுதியை சேர்ந்த பிரதீப்(25), பன்னீர்செல்பம்(54) ஆகியோரையும் கடித்தது. ஒரு கட்டத்தில் அந்த நாய் சாலையில் வரும் அனைவரையும் துரத்தி கடிக்க பாய்ந்தது. இதை கவனித்த பொதுமக்கள் வெறி பிடித்த நாயை அங்கிருந்து துரத்தி அடித்தனர்.

இந்த சம்பவத்தில் 2 மாணவர்கள் உட்பட 4 பேரும் பலத்த காயமடைந்தனர். பின்னர், 4 பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று தடுப்பூசி போடப்பட்டது. அதைதொடர்ந்து சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீசார் வெறி பிடித்த நாயை பிடிக்க மாநகராட்சி ஊழியர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: