சென்னை: சென்னை மீனம்பாக்கம், கிண்டி பகுதியில் வரும் 28ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கவிடத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; “சென்னைக்கு 28.02.2026 மற்றும் 01.03.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம் கிண்டி ஆகிய பகுதிகள் மற்றும் வழித்தடங்கல் “சிவப்பு மண்டலமாக (RED ZONE)” அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசு ஏற்பாடுகளைத் தவிர, 28.02.2026 மற்றும் 01.03.2026 ஆகிய இரண்டு நாட்களில் மேற்குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் (Unmanned Aerial Objects) பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், 2023ஆம் ஆண்டு, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163ன் கீழும், 2023ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 14ன் உட்பிரிவு (2) கீழும், ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராஃப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட 19.02.2026 முதல் 19.04.2026 வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
