சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.1,19,440க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.1,19,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுவும் வார தொடக்க நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860க்கும், பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,18,880க்கும் விற்பனையானது. தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் நேற்று முன்தினம் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையானது.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து சவரன் ரூ.1,19,120க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,890க்கு விற்பனையானது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் நேற்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.290க்கு விற்கப்பட்டது.

தொடர்ச்சியாக இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.14,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ.1,19,440க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ரூ.295க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மீண்டும் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது.

Related Stories: