பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி

பல்லேகெலே: உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்று போட்டி, இலங்கையின் பல்லேகெலே நகரில் நேற்று நடந்தது. அதில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாக். பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து துவக்க வீரர்களாக ஷாகிப்ஸதா ஃபர்கான், சயீம் அயூப் களமிறங்கினர். அயூப் 7 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த கேப்டன் சல்மான் ஆகா, 5 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி தந்தார்.

அதன் பின் ஃபர்கானுடன், பாபர் அஸம் இணை சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்த நிலையில் பாபர் 25 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்பும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஃபர்கான் (45 பந்து, 2 சிக்சர், 7 பவுண்டரி, 63 ரன்), 16வது ஓவரில் ஜேமி ஓவர்டன் பந்தில் வீழ்ந்தார்.

அதன் பின் வந்தோர் சொதப்பலாக ஆடி விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவரில் பாக். 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது.அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி போட்டிக்குள் இங்கிலாந்து நுழைந்துள்ளது.

Related Stories: