டெல்லி: திடக்கழிவு மேலாண்மை விதிகளை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழக்குகள் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை இனி ஈரமான குப்பை , உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
