வாகன விபத்தில் உயிர் நீத்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவியிடம் விபத்து காப்பீடு தொகை ரூ.1 கோடிக்கான வரைவோலையை வழங்கினார் காவல் ஆணையாளர்

 

சென்னை: சென்னை காவல் ஆணையாளர் வாகன விபத்தில் உயிர் நீத்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவியிடம் பாரத ஸ்டேட் வங்கியின் விபத்து காப்பீடு தொகை ரூ.1 கோடிக்கான வரைவோலையை வழங்கினார். சென்னை காவலில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் ஆளிநர்களின் நலன்களில் பல்வேறு திட்டங்கள் மூலம் தொடர்ச்சியாக காவல் ஆணையாளர் அ.ஆருண், தலைமையில் கூடுதல் ஆணையர் தலைமையிடம் நேரடி மேற்பார்வையில் காவலர் நலன் மற்றும் காவலர் குடும்பத்தினர் நலன் குறித்தும், மருத்துவம், கல்வி, குடியிருப்பு வசதிகள், கேண்டீன் வசதிகளுடன், பணியின் போது உயிர் நீத்த காவல் துறை குடும்பத்தினருக்கு உரிய வழிகாட்டுதல்களோடு வழங்க வேண்டிய பணப்பலன்கள் மற்றும் அனைத்து வசதிகளையும் வழங்கிட அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சென்னை காவல், ஆயுதப்படையின் மோட்டார் வாகனப்பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வளர் S.ராஜு, வ/54 என்பவர் கடந்த 04.05.2025 அன்று மதுரையில் வாகன விபத்தில் சிக்கி உயரிழந்தார். இவருக்கு சித்ராதேவி, வ/47என்ற மனைவி மற்றும் கேசவ சுப்ரமணி, வ/23 என்ற மகனும் உள்ளனர். காவல் துறையினரின் சம்பள கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் மூலம் விபத்து இறப்பு, விபத்து பாதிப்புகளுக்கான காப்பீடு தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இறந்துபோன ராஜு என்பவர் பாரத ஸ்டேட் வங்கியில் சம்பளம் பெறும் கணக்கு வைத்திருந்ததால், அவரது குடும்பத்தினருக்கு பாரத ஸ்டேட் வங்கி வழங்க வேண்டிய ரூ.1 கோடிக்கான விபத்து இறப்பு காப்பீடு தொகையை பெற்று தர சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவிட்டதன்பேரில், காவல் கூடுதல் ஆணையாளர் தலைமையில் காவல் அலுவலர்கள் இறந்துபோன சிறப்பு உதவி ஆய்வாளரின் ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து, பரிந்துரை செய்து, ரூ.1 கோடி விபத்து இறப்பு காப்பீடு தொகை வழங்க வங்கி ஆணை பிறப்பித்தது.

அதன்பேரில், இன்று (24.02.2026), சென்னை காவல் ஆணையரக, 2வது மாடியிலுள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையாளர் ஆ.அருண், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் முன்னிலையில், ரூ.1 கோடிக்கான வரைவோலையை, இறந்துபோன சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜுவின் மனைவி சித்ரா தேவியிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, இணை ஆணையாளர் (தலைமையிடம்) S.மகேஸ்வரன், துணை ஆணையாளர்கள் G.சுப்புலட்சுமி, (நிர்வாகம்) D.N.ஹரிகிரண் பிரசாத், (நலன் மற்றும் எஸ்டேட்) காவல் அதிகாரிகள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: