டெல்லி: சணலுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சணல் குவிண்டாலுக்கு ரூ.275 உயர்த்தி ஒரு குவிண்டால் ரூ.5,925ஆக நிர்ணயம் செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சணலுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டதால் ஏற்படும் இழப்புகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது.
