டெல்லி : கேரளா என்பதற்கு பதில் கேரளம் என பெயர் மாற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய தீர்மானத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
