லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4க்கு விற்றதால் அதிர்ச்சி; பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் இருந்து 13,000 பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் எடைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஒரு லாரி முழுவதும் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எடைக்கு புதிய புத்தகங்களை வாங்கிய வியாபாரி, அவற்றை உத்தராகண்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு விற்றதன் மூலம் மோசடி அம்பலமாகியுள்ளது. பழைய பேப்பர் கடையில் இருந்து புதிய புத்தகங்களை ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்து 13,000 பாடநூல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
