*வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு
திருக்காட்டுப்பள்ளி : தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு இளங்காடு கிராம மக்கள் சார்பில் மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது.எல்கை பந்தயத்தில் பெரியமாடு (8 மைல்), கரிச்சான்மாடு (6 மைல்), பூச்சிட்டுமாடு(5 மைல்), மற்றும் குதிரை(8 மைல்) வண்டிகள் கலந்து கொண்டன.
நேமம் – கல்லணை பிரதான சாலையில் நடைபெற்ற எல்கை பந்தயத்தை தஞ்சை மக்களவை உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேகரன், பூதலூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கல்லணை செல்லக்கண்ணு ஆகியோர் முன்னின்று துவக்கி வைத்தனர். போட்டியில் வென்றவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இளங்காடு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
