தமிழ்நாட்டுக்கு 2025-2026ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி தொகையில் ரூ.1 கூட விடிவிக்காத ஒன்றிய அரசு..!!

சென்னை: தமிழ்நாட்டுக்கு 2025-2026ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி தொகையில் ஒரு ரூபாயை கூட விடிவிக்காமல் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாகத் தமிழ்நாட்டுக்கு 2022-2023, 2025-2026 நிதியாண்டுகளுக்கு இடையில் மொத்தம் ரூ.20,789 கோடி வழங்க வேண்டும். இதன் மூலம், அதிக இழப்பீடு பெறும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் இடம்பெற்றது. எனினும், மொத்தத் தொகையில் அதிகபட்சமாக, 2022-23 நிதியாண்டில், ரூ. 16,215 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது.

இது 4 ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்ற மொத்தத் தொகையில் 78%சதவீதம் ஆகும். அதனை தொடர்ந்து, 2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு ரூ.4,574 கோடியை பெற்றது. ஜிஎஸ்டி இழப்பீடு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து 2024-25, 2025-2026 ஆகிய நிதியாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு எவ்வித இழப்பீட்டுத் தொகையும் விடுவிக்கப்படவில்லை. பெரும்பாலான மாநிலங்களுக்கு 2022-23 நிதியாண்டில்தான் அதிகபட்ச நிதி வழங்கப்பட்டது.

Related Stories: