ஆண்களை கேவலப்படுத்தாதீங்க ‘டவுசர் போட்டு குடிங்கப்பா…’: பாஜவினருக்கு திண்டுக்கல் அட்வைஸ்

திண்டுக்கல்: குடிங்க, டவுசர் போட்டு குடிங்க, அதுதான் நல்லது என பாஜ ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். திண்டுக்கல்லில் பாஜ இளைஞரணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:குடிப்பவர்களை நான் கேட்டுக் கொள்வது எல்லாம், தயவு செய்து டவுசர் போட்டு குடிங்கப்பா, படுங்கப்பா, அசிங்கப்படுத்துறீங்க. ஆண் மக்களை கேவலப்படுத்துறீங்க. குடிங்க, டவுசர் போட்டு குடிங்க. அதுதான் நல்லது. இது எனது வேண்டுகோள் என்றார்.

Related Stories: