மேற்குவங்கத்தில் கடந்த 2011 முதல் தொடர்ந்து 3 முறை நடந்த தேர்தலில் வென்று முதல்வர் பதவியை மம்தா தக்கவைத்துள்ளார். தற்போது 4வது முறையும் வெல்ல திட்டம் தீட்டி வருகிறார். மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் கடந்த முறை 215 தொகுதிகளை வென்று மம்தா சாதனை படைத்தார். இந்த முறையும் அதே வெற்றி கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் மம்தா களம் இறங்கி உள்ளார்.
அதற்கு முஸ்லிம்கள் தயவு வேண்டும் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. மேற்குவங்கத்தில் மொத்தம் 85 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடிய அளவுக்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 2021ல் இதில் 75 தொகுதிகளில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்த முறையும் அதே வெற்றியை பெற வேண்டும் என்றால் ஓவைசி கட்சியை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நெருக்கடி மம்தாவுக்கு உள்ளது. மற்றபடி இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியால் மம்தாவுக்கு எந்தவித தலைவலியும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
